பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் கொள்கையைப் பிரதமர் மோடி மாற்றியுள்ளார் எனத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவ்வையார் சிலைக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண்களுக்கு எனது வாழ்த்துக்கள். சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அவ்வையார் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். மகளிர் தலைமைத்துவத்திற்கு அவ்வையாரே சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.
பாரதப் பிரதமர் மோடி தலைமையில், நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 50 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தேசத்தின் கொள்கையைப் பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆராய்ச்சிகளிலும் பெண்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இது பெண்கள் மீதான நம்பிக்கையும், அவர்களின் முன்னேற்றத்தையும் எடுத்துக் காட்டுகிறது. பெண்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் என்றார்.