பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாத்தித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் என்றே சொல்லலாம்.
பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக்கருத்தில் கொண்டு மத்திய அரசு பெண்களுக்காக பல திட்டங்களை அமைத்துள்ளது.
அதில் உள்ள சில திட்டங்கள் குறித்து பார்ப்போம் :
1. கல்வி மற்றும் திறன் மேம்பாடு :
இந்த முதன்மையான திட்டம் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துவதையும், பெண்களுக்கான கல்வியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. ஸ்டாண்ட் அப் இந்தியா:
இந்த முன்முயற்சியானது பெண் தொழில்முனைவோருக்கு கடன்கள் மற்றும் ஆதரவை வழங்குகிறது, மேலும் அவர்கள் தொழில்களை நிறுவவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவும் ஊக்குவிக்கிறது.
3. திறன் இந்தியா பணி ( skill india mission ) :
இந்த பணியானது பெண்களை தொழில்துறை சார்ந்த திறன்களுடன் ஆயத்தப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, மேலும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழுங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
4. தீர்வு காணும் மையம் திட்டம் :
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வு காணும் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் தீர்வு காணும் மையம் உருவாக்கியது.
5. பெண்களுக்கான உதவி எண் :
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகவும், அவசரகால உதவியையும் வழங்க பெண்களுக்கான உதவி எண்ணாக 181 உள்ளது. இது 24/7 எப்போதும் இயக்கத்தில் இருக்கும்.
6. மகிளா காவல்துறை தன்னார்வலர்கள் :
இந்த தன்னார்வலர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பொது இடங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசாருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
7. சுகன்யா சம்ரிதி யோஜனா :
சுகன்யா சம்ரிதி யோஜனா அதாவது பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம். பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக உள்ள சிறப்பு சேமிப்பு திட்டம் இது.
இந்த சேமிப்பு திட்டத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஆரம்பித்துக் கொள்ளலாம். ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தை தொடங்கி, அவர்களின் எதிர்காலத்துக்காக சேமித்துக்கொள்ளலாம்.
8. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா :
புதிய தொழில் தொடங்க விருப்பமான பெண்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குவதுதான் முத்ரா திட்டம். அந்தவகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதன் மூலம் பெண்கள் தன் நம்பிக்கையுடன் வளர்ச்சி அடைவார்கள்.
9. மஹிலா சக்தி கேந்திரா :
சமுதாய பங்கேற்பின் மூலம் ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்து அதன் மூலம் அவர்கள் தங்களின் முழு ஆற்றலை உணர்வதற்கான சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
இந்த திட்டங்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் அவர்களின் முழு திறனை பயன்படுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கியமான படிகள் ஆகும்.