கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை தமிழக அரசும், வனத்துறையும் செய்துதர வேண்டும் என ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனம வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலும், வெள்ளியங்கிரி மலை மீது ஏழாவது மலையாகிய கிரிமலையில் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரும் குடிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
வெள்ளிமலை, தட்சிணயிலாயம், தென்கயிலை எனப்பெயர்கள் கொண்ட வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருஉருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் தவம் செய்துவரும் மலையாக வெள்ளியங்கிரி மலை போற்றப்படுகிறது.
இந்த திருக்கோயிலின் உற்சவகாலமானது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் முடிய நான்கு மாதங்கள் நடைபெறும். இந்த நான்கு மாதகாலங்கள் தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கடந்த பிப்ரவரி 25 -ம்தேதி பக்தர்கள் வந்தபோது முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி சென்றனர். இதனால், வாகன திருட்டு வாகனத்தில் இருந்த பொருட்கள் பெட்ரோல் திருட்டாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், போக்குவரத்து சீராக இல்லாத நிலையில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வரும் மார்ச் 7 -ம் தேதி முதல் 10 -ம் தேதி வரை நிறைய பக்தர்கள் வருகை தருவார்கள்.
எனவே, புனிதமான மலைகளை பாதுகாக்கவும் அங்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் மலைகளையும் மூலிகை முதலான செடி கொடி மரங்களை பாதுகாக்கவும் தக்க ஏற்பாடுகளை தமிழக வனத்துறையினரும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.