பருவதமலையில் பகீர் - இந்து முன்னணி விளாசல்!
Jul 31, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவதமலையில் பகீர் – இந்து முன்னணி விளாசல்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் புனித மலைகளில் ஒன்றான பருவதமலையில், பக்தர்களின் தரிசனத்திற்கு வசதியும், மலைகளில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளயிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சுமார் 4,500 அடிகள் கொண்ட பருவதமலை மலைக்கோயில் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக்கோயில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க வருகை தருகின்றனர்.‌ மலையை சுற்றி அரிய வகை மூலிகைகளும் விலை உயர்ந்த மரங்களும் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்த மலையாக இது விளங்குகிறது.

இந்த நிலையில், பர்வதமலையில் சமூக விரோதிகள் இந்த மலைக்கு தீ வைத்து உள்ளனர். இதனால், இந்த மலையில் வாழும் உயிரினங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் விலையுர்ந்த மரங்களும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன.

இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த மலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பட வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. இதனால் பக்தர்கள் கைகளில் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வீசி எறிவதால் மலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் மலைக்கு சென்று சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை காவல்துறையும் வனத்துறையும் கண்டு கொள்வதில்லை. இந்து அறநிலைத்துறை இங்கு வரும் பக்தர்களிடையே பணம் வசூலிப்பது குறியாக உள்ளதே தவிர மலைக்கோவில் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை.

தொடர்ந்து, இந்த மலையை சுற்றியுள்ள மலைகளிலும் தீ வைப்பது தொடர் வாடிக்கையாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் கண்டு கொள்வதில்லை. உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை இந்தப் பகுதியிலே ஒரு சோதனை சாவடிகளை அமைத்து இது போன்ற சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக அரசு உடனே தலையிட்டு இயற்கை எழில் நிறைந்த இந்த மலைகளை குறி வைத்து தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்து மலைகள் உள்ள அரிய வகை மூலிகைகளையும் மரங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: hindu munnani
ShareTweetSendShare
Previous Post

மகா சிவராத்திரி! – நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

வெள்ளியங்கிரி மலையில் அடிப்படை வசதிகள் தேவை – ஆன்மீக அன்பர்கள் கோரிக்கை!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies