நல்ல அரசியலுடன் நல்ல பொருளாதாரமும் கைகோர்க்கும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு உச்சி மாநாட்டில் ‘பாரத்: அடுத்த தசாப்தம்’ என்ற தலைப்பில் பேசிய பிரதமர் மோடி,
வலுவான ஜனநாயக நாடாக உலகிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது என்றார். விக்சித் பாரதத்தின் கனவுகளை நிறைவேற்ற இந்த தசாப்தம் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த தசாப்தம் இந்தியாவின் அதிவேக இணைப்பு, அதிவேக இயக்கம் மற்றும் அதிவேக செழிப்பு ஆகியவற்றின் தசாப்தமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சியின் வேகம் மற்றும் அளவை அதிகரிப்பதில் தான் தனது முழு கவனமும் இருப்பதாக மோடி கூறினார். கடந்த பத்து வருடங்களில் மக்கள் கண்டது தீர்வுகளையே தவிர கோஷங்களை அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.