சவுதி அரேபியாவில் பெண் நிருபர் ஒருவரிடம் ஆண் ரோபோட் செய்த காரியம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டின் முதல் ஆண் ரோபோ முஹம்மது உள்ளது. இந்த ரோபோ ஒரு நேரலை நிகழ்வில் ஒரு பெண் நிருபரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகப் புகார் எழுந்துள்ளது.
சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ அருகில் நின்றுகொண்டு பெண் நிருபவர் செய்தியை வழக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் நிருபரின் பின்னால் நின்று கொண்டிருந்த ரோபோ தகாத முறையில் நடந்தது.
ரோபோ செயலை உணர்ந்த அந்த ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன் பின்னரே அந்த ரோபோ அமைதியாகிறது.
நேரலையில் இந்த சம்பவம் நடந்ததால் அந்த செய்தி நிறுவனத்தால் இதைக் எதுவும் செய்யும் முடியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த ரோபோவின் செயலை கடுமையாகச் சாடியுள்ளனர்.
இதைக் கோட் செய்தவன் மிக மிகத் தப்பான முறையில் கோடிங் எழுதியுள்ளதாகச் சிலர் குற்றம்சாடி வருகிறார்கள்.
சவுதி அரேபியா ஏஐ துறையில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது என்பதைக் காட்ட அந்நாட்டு அரசே QSS சிஸ்டம்ஸ் மூலம் இந்த ரோபோவை உருவாக்கி இருந்தது. ஆனால், இந்த ரோபோ பெண்களிடம் தவறாக நடக்கிறது.