இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி தர்மசாலா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களமிறங்கினர்.
இதில் ஜெய்ஸ்வால் 5 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 57 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்தார். மொத்தமாக அவர் 13 பௌண்டரீஸ், 3 சிக்சர்ஸ் என 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் சதம் அடித்தார். மொத்தமாக அவர் 12 பௌண்டரீஸ், 5 சிக்சர்ஸ் என 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய படிக்கல் 65 ரன்களும், சப்பரஸ் கான் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஜடேஜா மற்றும் ஜூரில் ஆகியோர் தலா 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
அஸ்வின் டக் அவுட் ஆகா குலதீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இந்தியா 8 விக்கெட்கள் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது.