பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இதில் ஒன்று இந்தியாவை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சி.
இந்தியா சுற்றுலா தலமாக மாறினால் பொருளாதார ரீதியாக இந்தியா வளர்ச்சி அடையும் என்பதற்காக பாரத பிரதமர் அயராது முயற்சி செய்து வருகிறார்.
அந்த வகையில் முன்னதாக பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்து அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும் லட்சத்தீவ் இயற்கை அழகுடன் அதன் அமைதி மனம் மயங்க செய்கிறது என்ற சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார்.
பின்னர் 108 வைணவத்தலங்களுள் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
அங்கு கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்று ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார்.
பின்னர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்து வைத்தார். பின்னர் ராமர் கோவில் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்டு தினமும் லட்ச கணக்கில் பக்தர்கள் சென்றுகொண்டுள்ளனர்.
பின்னர் குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில் பிரதமர் மோடி ஆழ்கடலில் ‛டைவ்’ அடித்து தரைப்பகுதிக்கு சென்று மயிலிறகை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.
அதேபோல் கேரளா சென்ற பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனைசெய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்துக்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றி பார்த்து பின்னர் மத்திய கோஹோரா மலைத்தொடரின் மிஹிமுக் பகுதியில் யானை சவாரி மேற்கொண்டார்.
பின்னர் பிரதமர் மோடி கவுகாத்தியில் ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார். இந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் மூலம் அந்த பகுதியை பற்றி பாரத மக்களுக்கு மட்டுமின்றி உலகமுழுவதும் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் முதற்கொண்டு வெளிநாட்டவர்களும் அப்பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். இது இந்தியா பொருளாதார நாடக வளர்ச்சி அடைய ஒரு பங்காக இருக்கும்.