உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணி கூடுதலாக புள்ளிகள் பெற்று முன்னிலையை வலுப்படுத்தி உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலா மைதானத்தில் முடிவடைந்தது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களை எடுத்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 103 ரன்களும், கில் 110 ரன்களும் எடுத்தனர்.
அதேபோல் படிக்கல் 65 ரன்களும், சப்பரஸ் கான் 56 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் இந்திய அணி 477 ரன்களை எடுத்தது.
இதை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 195 ரன்களை மட்டுமே எடுத்ததால் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி நிறைவடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணி கூடுதலாக புள்ளிகள் பெற்று முன்னிலையை வலுப்படுத்தி உள்ளது. இங்கிலாந்து சரிவை சந்தித்துள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-
1. இந்தியா – 68.51%
2. நியூசிலாந்து – 60.00%
3. ஆஸ்திரேலியா – 59.09%
4. வங்காளதேசம் -50.00%
5. பாகிஸ்தான் – 36.66%
6. வெஸ்ட் இண்டீஸ் – 33.33%
7. தென் ஆப்பிரிக்கா – 25.00%
8. இங்கிலாந்து – 17.5%
9. இலங்கை – 00.00%