மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை வெளியிட்டார்.
அதன்படி தகுதி நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா கிருஷ்ணாநகரில் போட்டியிடுகிறார். அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பெஹ்ராம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா அசன்சோலை தொகுதியில் போட்டியிடுகிறார்.