ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மணல் சிற்பம் செதுக்கியுள்ளார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து நிகழ்வுகளையும் மணல் சிற்பங்களாக செதுக்கி வருகிறார்.
அந்த வகையில் முன்னதாக மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் உருவச்சிலையை செதுக்கினார். இந்நிலையில் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மணல் சிற்பம் செதுக்கியுள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒடிசா, பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.
அந்த சிற்பத்தில் முதல் முறை வாக்களிக்கவுள்ள வாக்காளர்களை வரைந்து அவர்கள் கையில் வாக்கு மை வைத்து ‘தேசத்திற்கான எனது முதல் வாக்கு’ என்பதை எழுதியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.