ஒரு ஜாபர் சாதிக் பிடித்தால் போதாது, அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும்! - அண்ணாமலை
Aug 16, 2025, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு ஜாபர் சாதிக் பிடித்தால் போதாது, அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 10, 2024, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்பொழுதுமே இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகம் மரியாதை கொடுக்காது. தேர்தல் சமயங்களில் பகடை காய்களாக பயன்படுத்துவது மட்டும்தான் திமுகவின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.  அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,

தேர்தல் களத்தில் இருக்கிறோம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேட்பாளர் அறிவிப்பு வெளியிடப்படலாம்.

பல அரசியல் கட்சிகளின் உண்மை முகம் வெளியில் வந்து கொண்டிருக்கிறது கமல்ஹாசன் அவர்கள் திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறேன் என இணைந்துள்ளார். அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் கமலஹாசன் மீது கடுமையான வார்த்தைகளை படுத்துகிறார்கள், நான் அப்படி பயன்படுத்த போவதில்லை.

தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கும் எதிராக ஒரு அரசியல் செய்வது எவ்வளவு கடினம் என்பதை கமல்ஹாசன் திமுகவுடன் இணைந்திருக்கிறது எடுத்துக்காட்டுகிறது.

கமல்ஹாசன் யாரை எதிர்த்து 2021 சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்தாரோ இன்று அவர்கள் ஓட்டு போட்டு ராஜ்ய சபாவிற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது அனைத்தையும் இணைக்கும் ஒரு நல்ல புள்ளியாக பாஜக இருக்கிறது.

இளைஞர்கள் பெண்கள் என மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் பாஜகவின் பக்கம் வரவேண்டும், ஒரு மாற்றத்தை உறுதியாக நாம் செய்து காட்டுவோம்.

போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய விஷயமாக உள்ளது டெல்லியில்  பத்திரிகையாளர் சந்திப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2019ல் இருந்து போதை பொருள் கடத்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் படம் எடுத்தது, ஹோட்டல் வாங்கியது, அரசியல் சார்ந்த புள்ளிகளுடன் இருக்கும் தொடர்பு என விசாரணை நடைபெறுகிறது.

பாஜகவை சார்ந்தவர்கள் சாலையில் நடந்து சென்று கீழே தவறி விழுந்தால் கூட பாஜக என வெளிப்படையாக கூறும் பத்திரிகையாளர்கள், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபரை திரைப்பட தயாரிப்பாளர் என போடுகிறார்கள்.

அவர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்று யாரும் பதிவிடுவதில்லை அவர் திமுகவின் அயலக அணியின் முக்கிய நபர் என்பதை யாரும் மறைக்க வேண்டியதில்லை. அதை வைத்து இவர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

திமுகவின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாகவும் இருந்துள்ளார். இதை தமிழக மக்கள் தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு ஜாபர் சாதிக்கு பிடித்தால் போதாது அரசு நடத்தும் மது கடைகளையும் மூட வேண்டும். அரசு மற்றும் திமுகவின் முக்கிய புள்ளிகள் மது ஆலைகளை நடத்திவிட்டு ஒரு ஜாபர் சாதிக்க பிடித்து விட்டால் போதை ஒழிந்து விடும் எனக் கூறுவது சரியாக இருக்காது.

இது சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் என்சிபி அதிகாரிகள் பாரபட்சம் இன்றி அவர்களை விசாரணை ஆணையத்திற்குள் கொண்டு வர வேண்டும், அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

பாஜக உடனான கூட்டணி குறித்த முடிவுகள், மற்ற மாநிலங்களில் இப்பொழுது தான் வந்து கொண்டிருக்கிறத. முதல் பட்டியல் என்பது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் கூட்டணி பெரிதாக தேவைப்படாத மாநிலங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் பட்டியல் வெளியிடும் பட்சத்தில், செய்தியாளர்களுக்கு கண்டிப்பாக தெரிவிப்பேன். தேர்தல் அதிகாரிகளை பொறுத்தவரையில் பதவி விலகுவது சாதாரணமான ஒரு விஷயம்தான். அதை அவர் தான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை அதிகாரப்பூர்வமாக கூற வேண்டும்.

பாஜக கூட்டணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாரிவேந்தர் பெரம்பலூரில் போட்டியிடுகிறார், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், சரத்குமார், போன்ற முக்கியமான தலைவர்கள் அந்தந்த பகுதிகளில் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த முறை பாஜகவின் தேர்தல் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு பகுதியாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியாக அணுகி கொண்டிருக்கிறோம். ஜி.கே.வாசன் நம்முடன் தொடர்பில் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பார்ப்பீர்கள் நிறைய கட்சிகள் என கூறுவதை விட, யாரெல்லாம் மோடியின் சித்தாந்தத்தை விரும்புகிறார்களோ வரும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் தொலைநோக்கு பார்வை புரிதல் ஆகியவை குறித்த தெளிவு உடையவர்கள் நம்முடன் இருப்பார்கள்.

பிரதமர் மோடியை நான் அமைச்சராக இல்லை என்றால் பீஸ் ஆக்கி விடுவேன் என அன்பரசன் கூறியது குறித்து கேட்டபோது,

அதற்கு எங்கள் மாவட்ட தலைவர் ஒரு அப்பாவிற்கு பிறந்திருந்தவரா இருந்தால் என் மீது கை வைக்கட்டும் எனக் கூறியுள்ளார். முதலில் எங்கள் மாவட்ட தலைவரை சந்தித்து விட்டு, அதன் பிறகு என்னை சந்திக்கட்டும். பிறகு என்னையும் தாண்டி பிரதமர் மேல் கை வைக்க வேண்டும். மாவட்ட தலைவர் சவால் விடுத்துள்ளார் அதை ஏற்றுக் கொண்டு அவர் மீது கை வைக்கட்டும் அதன் பிறகு நான் பேசுகிறேன்.

எப்பொழுதுமே இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகம் மரியாதை கொடுக்காது. தேர்தல் சமயங்களில் பகடை காய்களாக பயன்படுத்துவது மட்டும்தான் திமுகவின் நோக்கம்.

நான் நேரடியாகவே கேட்கிறேன் திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன செய்தார்கள்,  மத்திய அரசு சார்பாக கல்வி உதவித்தொகை, புனித யாத்திரைக்கான தொகை என நிறைய உதவிகளை எங்களால் கூற முடியும்.  திமுகவால் கூற முடியுமா? நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தொகுதி கொடுப்பது பற்றி இரண்டாவதாக கேட்கலாம், முதல் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை என தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மாசி அமாவாசை: இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!

Next Post

மஞ்சுமெல் பாய்ஸ் : திகிலூட்டும் உண்மை கதை – நடந்தது என்ன ?

Related News

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயார் பிறந்த நாள் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்பு!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் : அட்டாரி – வாகா எல்லையில் தேசிய கொடியிறக்கும் நிகழ்ச்சி!

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இல. கணேசனின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – இபிஎஸ் இரங்கல்!

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

இல.கணேசன் மறைவு – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி!

இல கணேசன் மறைவு – பிரதமர், தமிழக ஆளுநர், எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அலாஸ்காவில் டிரம்ப் – புதின் சந்திப்பு : சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies