அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை, உயராமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது, நமது பெண் சக்திகளின் குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதி செய்ய, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தக்காளி, வெங்காயம் முதல் பருப்பு வரை உள்ள அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் உயராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். இந்த அரசாங்கம் இந்தியப் பெண்களின் மீது அக்கறை கொண்டுள்ளது.
நாங்கள் எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுடன் தொடர்ந்து இருப்போம். அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். நாங்கள் எங்கள் பெண் சக்தியை மதிக்கிறோம். அவர்கள் சிறந்த வீட்டு பட்ஜெட்டைப் பெற வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.