2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸ் முதல் பேட்டிங் முடிவில் மும்பை அணி 224 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் விளையாடிவருகிறது.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா 46 ரன்களும், 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.
அதேபோல் விதர்பா அணியில் தாகூர் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் ஆதித்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் மும்பை அணி 224 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. தற்போது விதர்பா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.