வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?
Jun 25, 2026, 10:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் : யார் இவர்கள்?

Murugesan M by Murugesan M
Mar 10, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு, ஷியா முஸ்லீமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவை சேர்ந்த ஆயுதமேந்திய குழுவாகும். ஹூதிகள் இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூதி என்பவரை நினைவு கூறும் வகையில் அந்த குழு ஹூதி கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990ஆம் ஆண்டுகளில் ஏமனில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல்-இராணுவ அமைப்பாகும். மேலும் இந்த குழு ஈரானின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.

1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் தற்போதைய முக்கிய குறிக்கோளாகும்.

இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் இந்திய கடற்படை அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கடற்படை பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை அவர்களிடம் ருந்து காப்பற்றியும் உள்ளது.

மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.

ஏமன் அரசை வீழ்த்திய பின்னர், 2014 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் போராடி வருகின்றனர்.

2022 வரை இந்த போரினால் 377,000 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.

சவுதி அரேபியா இராணுவத்தின் ஆதரவுடன், அதிபர் சலே 2003 ஆம் ஆண்டு அந்த கிளர்ச்சிக் குழுவை அகற்ற முயன்றார், ஆனால் ஹூதிகள் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹூதிகள் இயங்கி வருகின்றனர்.

Tags: Houthi Rebels Attacking Merchant Ships: Who Are They?
ShareTweetSendShare
Previous Post

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்கள் அவசியம்! – இந்தியா வலியுறுத்தல்

Next Post

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : மும்பை 224 ரன்கள்!

Related News

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies