மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) உருவாக்கிய பள்ளி மற்றும் ஆசிரியர் கல்வியில் பல்வேறு முன்முயற்சிகளை புதுதில்லியில் உள்ள கௌஷல் பவனில் இன்று தொடங்கி வைத்தார்.
தேசிய வழிகாட்டுதல் இயக்கம் (என்.எம்.எம்), ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரநிலைகள் (என்.பி.எஸ்.டி), என்.எம்.எம் மற்றும் என்.பி.எஸ்.டி குறித்த அச்சிடப்பட்ட புத்தகங்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் வீடியோவுடன் கூடிய பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை தர்மேந்திரப் பிரதான் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,
2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதில் இந்த முன்முயற்சிகளும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார். தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திறம்பட செயல்படுத்தவும், ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், தரமான கல்வியை வழங்கவும் இது உதவும் என்று அவர் கூறினார்.
தாய்மொழியில் கற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறிய தர்மேந்திரப் பிரதான், இந்திய மொழிகளில் கற்றலை ஊக்குவிக்க, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.