2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை – விதர்பா அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதல் நாள் முடிவில் விதர்பா அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 31 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டியது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் விளையாடிவருகிறது.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா 46 ரன்களும், 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.
அதேபோல் விதர்பா அணியில் தாகூர் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் ஆதித்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் மும்பை அணி 224 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய துருவ் 2வது ஓவர்லயே டக் அவுட் ஆனார். இதை தொடர்த்து களமிறங்கிய அமன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கருண் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய ஆதித்யா காலத்தில் உள்ளார். அதேபோல் மற்றோரு தொடக்க வீரரான அதர்வா 21 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
மும்பை அணியில் தாவல் 2 விக்கெட்களும், ஷர்டுல தாகூர் 1 விக்கெட்டும் வீழ்த்திவுள்ளனர். தற்போது விதர்பா அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 31 ரன்களை எடுத்துள்ளது.