இராம நவமிக்கு பொது விடுமுறை அளித்து மேற்கு வங்காள அரசு உத்தரவிட்டுள்ளது.
இராம நவமி பண்டிகை அடுத்த மாதம் 17-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்காள அரசு ராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இராம நவமியான ஏப்ரல் 17-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்து.
கடந்த ஆண்டு ராம நவமி கொண்டாட்டத்தின் போது, இங்குள்ள ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது. இரு சமூகத்தினர் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டன. பா.ஜ., – எம்.எல்.ஏ., உட்பட பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்காள அரசு ராம நவமிக்கு பொது விடுமுறை அறிவிப்பது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.