புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் ஒன்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட இருந்த போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றின் சர்வதேச மதிப்பு ரு. 2000 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கும் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மிமிசல் அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான 70 கிலோ கஞ்சா ஆயிலை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது இலங்கைக்கு கடத்த இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.