உத்தரப்பிரதேச சட்ட மேலவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
உத்தரப்பிரதேச சட்ட மேலவையின் 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைகிறது. இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் மார்ச் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 10 தேசிய ஜனநாயக வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
பாஜக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் மகேந்திர சிங், அசோக் கட்டாரியா, விஜய் பகதூர் பதக் (மாநில பாஜக துணைத் தலைவர்), மோஹித் பெனிவால், ராம் திரத் சிங்கால் (ஜான்சி முன்னாள் மேயர்) மற்றும் தர்மேந்திர சிங் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி உடன் இருந்தனர்.