அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் அடுத்தடுத்து இணைந்து வரும் நிலையில், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜலெட்சுமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகள் பல்டி அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவை காலி செய்யும் வகையில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களை பாஜக தங்களது அணிக்கு இழுத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இதனையடுத்து இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைந்துக்கொண்டார்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி ராஜலட்சுமி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் மற்றும் தமிழக பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,
மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சகோதரி திருமதி. ராஜலட்சுமி அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @kishanreddybjp, மாண்புமிகு மத்திய இணை… pic.twitter.com/qvTeGOkFsY
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 11, 2024
சகோதரி ராஜலட்சுமியை மனதார வரவேற்பதோடு, சாமானிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் அரசியல் பணிகளுக்கு, அவரது மேலான பங்களிப்பையும் கோருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.