சிவகங்கை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளருமான தொழிலதிபர் N. ராமேஸ்வரன், மாவட்ட இணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இராமசாமி, கவிக்குமார் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றிய & நகர நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, இன்றைய தினம், தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்வி குழுமத்தின் துணைத் தலைவரும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளருமான தொழிலதிபர் திரு. N. ராமேஸ்வரன் அவர்கள், மாவட்ட இணைச் செயலாளர் திரு. ரவிக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திரு.இராமசாமி, திரு. கவிக்குமார்… pic.twitter.com/cNCW9XmAIF
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 11, 2024
அவர்கள் அனைவரையும் மனதார வரவேற்பதோடு, தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நேர்மையான அரசியல் தமிழகத்தில் உருவாக, அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் கோரிக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.