ஊசுட்டேரி சரணாலயத்தில் பறவைகள் கொன்று குவிப்பு!
Sep 13, 2026, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊசுட்டேரி சரணாலயத்தில் பறவைகள் கொன்று குவிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 11, 2024, 02:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி அருகில் ஊசுட்டேரி அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி, 850 ஹெக்டேரில் இந்த ஏரி பறந்து விரிந்துள்ளது.

ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15.54 சதுர கிலோ மீட்டராகும். அதேபோல் ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.28 கி.மீ. ஆகும். மேலும் இந்த ஏரி 2008 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசாலும் 2014 ஆம் ஆண்டு தமிழக அரசாலும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் ஏரியாக உள்ளது. இந்த ஏரிக்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, மத்திய ஆசியா, ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பறவையினங்கள் நவம்பர் மாதம் துவங்கி, மார்ச் வரையில் வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 130 வகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஏரியில் வனவிலங்குகள், பறவைகள் நேற்று சராமரியாக கொன்று குவிக்கப்பட்டன.

அவற்றை விற்பதற்காக ஊசுட்டேரியின் சாலை மார்க்கமாக கொண்டு வந்த வேட்டை கும்பல், புதுச்சேரி வனத்துறை ஊழியர்களை கண்டதும் வேட்டையாடப்பட்ட விலங்குகளை போட்டுவிட்டு தப்பியோடினர்.

அந்த கும்பல் விட்டு சென்ற இடத்தில், புனுகு பூனை, நரிகுட்டி, கீரிப்பிள்ளை, வவ்வால், பாம்புதாரா, சம்பு கோழி மற்றும் அரிவாள் மூக்கன், மடையன், மஞ்சள் மூக்கு நாரை, கொக்கு, செரவி வாத்து உள்ளிட்ட பறவையினங்கள் இறந்த நிலையில் கிடந்தன.

மேலும் உயிருடன் நான்கு உடும்புகள், 40 கிளிகள் மீட்கப்பட்டன. மொத்தம் 108 வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, வனத் துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த உயிரினங்கள் எப்படி கொல்லப்பட்டன என்று கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய வனத் துறை முடிவு செய்துள்ளன. இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Killing of birds in Oosuteri sanctuary!
Share
Tweet
SendShare
Previous Post

 பா.ஜ.,வில் ஐக்கியமான ரஜினி மன்றத்தினர்!

Next Post

ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies