தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஆளுநர் மாளிகையில் “பாரத பண்பாடு” புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு “பழந்தமிழ் இலக்கியங்களில் பாரதப் பண்பாடு” மற்றும் “தமிழ் கல்வெட்டுகளில் பாரதப் பண்பாடு” என்ற தலைப்பிலான இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் முழுவதும் உண்மையை சொல்லவில்லை. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். ராமேஸ்வரம் கோயில் கோபுரம் வண்ணப்பூச்சுகள் இன்றி பொலிவு இல்லாமல் காட்சியளிக்கிறது” என்று கூறினார்.