பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொகுதிப் பங்கீடு தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்தார்.
கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக முன்னதாக சரத்குமார் அறிவித்தார்.
இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் இன்று சென்னை தி நகர் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனக்கு சீட்டும் வேண்டாம்.. எதுவும் வேண்டாம்.. ஒரே நோக்கம் தான்’ பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக்க சமத்துவ மக்கள் கட்சித் தொடர்ந்து உழைக்கும் என அக்கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளரிடம் தெரிவித்தார்.