எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உட்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது தமிழ் எழுத்தாளரான கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
மமாங் தய் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ புத்தகத்தை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.