கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நல குறைவால் இன்று காலமானார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இன்று காலை இறைவன் திருவடி அடைந்தார். அவருக்கு, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால், கோவை காமாட்சிபுரி ஆதீனத்தை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தங்க கவசம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் ஜெயலலிதாவிடம் முன்வைத்தவர் இவரே.
மேலும், அண்மையில், டெல்லியில் புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்புவிழாவில் பங்கு கொண்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.