பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 30 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோ மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் விதிகளின் கீழ், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள NIA குழுக்களால் மூன்று அசையாத மற்றும் ஒரு அசையும் சொத்துக்கள் இணைக்கப்பட்டன.
பிஷ்னோய் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பர்தீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலையிலும் அக்கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அக்கும்பலுக்கு போதை மருந்து கடத்தலிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவனுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவல் மூலம் சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.