இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்.
தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்தனர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகத்தில் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து உரையாடினர்.