மும்பை தொடர் குண்டு வெடிப்பு தினம் : இன்று கடைபிடிப்பு!
Aug 18, 2026, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தினம் : இன்று கடைபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 12:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மும்பை தொடர் குண்டு வெடிப்பின் 31-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் கட்டிடம், மஸ்ஜித்-மாண்ட்வி கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, ஜவேரி பஜார், பிளாசா சினிமா, கதா பஜார், செஞ்சுரி பஜார், ஹோட்டல் சீ ராக் உள்ளிட்ட 13 இடங்களில் பிற்பகல் 1:30 மணி முதல் 3:40 மணி வரை தொடர்ந்து குண்டுகள் வெடித்தன.

இந்த கொடிய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர்  காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதல்முறையாக  ஆர்டிஎக்ஸ் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த தொடர் குண்டுவெடிப்பை டைகர் மேமனின் உதவியுடன் நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் நடத்தினான். மேமன் மும்பையில் உள்ள தனது குடியிருப்புகள் மற்றும் கேரேஜ்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு மூலம் மும்பை தாதாவாக அறியப்பட்ட தாவூத் இப்ராகிம் சர்வதேச தீவிரவாதியாக உருவெடுத்தான்.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதற்கு பழிவாங்க தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் மும்பையில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் கூட்டங்களை நடத்தி, துபாய் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி மும்பையில் குண்டுகள் புதைக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

Tags: dawood ibrahimMumbai serial blastBombay Stock ExchangeTiger Memon
Share
Tweet
SendShare
Previous Post

ரமலான் நோன்பு!- வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

Next Post

அண்ணாமலையை சந்தித்த பாரிவேந்தர்!

Related News

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies