ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து முனையங்களில் இருந்துசிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு இன்று 230 சிறப்புப் பேருந்துகளுடன் மொத்தம் 822 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நாளை 110 சிறப்புப் பேருந்துகளுடன் மொத்தம் 702 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, கூடுதலாக 800 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரத்தில் இருந்து கூடுதலாக 150 சிறப்பு பேருந்துகள் என 750 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பூந்தமல்லியில் இருந்து வரும் வணிக மற்றும் கனரக வாகனங்கள், சென்னை பெருநகர எல்லைக்குள் அனுமதிக்கப்படாமல், ஆலப்பாக்கம் சந்திப்பில் திருப்பி அனுப்பப்படும்.
மாதவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் வணிக மற்றும் கனரக வாகனங்கள், சென்னை பெருநகர எல்லைக்குள்ளும் மதுரவாயல் நோக்கியும் அனுமதிக்கப்படாது.
அந்த வாகனங்கள் செங்குன்றம் வழியாக 200 அடி புறவழிச்சாலையில் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















