ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லண்டனில் தலைமறைவாக உள்ள இடைத்தரகரான பிரகாஷ் கண்ணையாவுக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
பெருமளவில் பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
வீரமணிக்கும் இடைத்தரகரான பிரகாஷ் கண்ணையாவுக்கும் இடையே பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக சிறப்பு புலனாய்வு குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் கண்ணையா தற்போது லண்டனில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது வங்கி கணக்கில் உள்ள 24 கோடி இருப்பு தொகையை புலனாய்வு குழுவினர் முடக்கியுள்ளனர்.
இதுதவிர, கடந்த மூன்று ஆண்டுகளில் அவரது வங்கி கணக்குகளில் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனை விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வீரமணி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 23 கிலோ தங்கம் வாங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















