தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமனோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதற்காக ஏராளமானோர் சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு புறப்பட்டனர். ஒரே நேரத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. இதனால், ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
















