பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் - உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு - சிறப்பு தொகுப்பு!
Oct 16, 2026, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாட்டிற்கு இணையாக கட்டப்பட்டுள்ளதாக போற்றப்படும் திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கடைகள் ஆக்கிரமிப்பு, சுகாதாரக் குறைபாட்டால் பரிதாபமாக காட்சியளிக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், தற்போது முறையான பராமரிப்பின்றி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

திருச்சி பஞ்சப்பூர்… சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்… நவீன வசதிகளுடன் பயணிகளின் சிரமங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது.

பேருந்து நிலையத்தின் உள்ளே ஏற்கெனவே கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாகச் சிறிய கடைகள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பெரிய கடைகளுக்கு மாதம் சுமார் 5 லட்சம் ரூபாயும், சில கடைகளுக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலும் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போதிய வாடிக்கையாளர்கள் வராததால் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறவில்லை எனக் கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வியாபாரப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, பேருந்து நிலையத்தின் உள்ளே விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கடைகளில் அடுப்பு எரிக்கக் கூடாது என்ற விதிமுறைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், சில இடங்களில் அடுப்புகள் எரிக்கப்படுவதால் புகை பரவி பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குளிர்சாதன வசதி செயல்படாததால் வெயில் நேரங்களில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிகளிலும், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளிலும் சிறிய கடைகள் ஆக்கிரமித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் குழந்தைகளுடன் வருபவர்கள், அதிக உடைமைகளைச் சுமந்து வருபவர்கள் உள்ளிட்ட பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் முறையான பராமரிப்பிலும் குறைபாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள LED தகவல் திரைகளும் சில இடங்களில் சரிவரச் செயல்படவில்லை என்றும், பேருந்துகள் நிற்கும் இடம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வதில் பயணிகள் சிரமப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

கூடுதல் கடைகள் அமைக்க அனுமதி வழங்கியது யார்? நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், விதிமீறல்களைத் தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குடிநீர், சுகாதாரம், குளிர்சாதனம் மற்றும் தகவல் திரைகளின் செயல்பாட்டை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முன்வருமா? எனப் பொதுமக்களும், வியாபாரிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மீண்டும் சிறப்பாகச் செயல்படுமா? பயணிகளின் சிரமங்களும், வியாபாரிகளின் வேதனையும் முடிவுக்கு வருமா? கட்டமைப்பில் காட்டிய பிரமாண்டம் பராமரிப்பிலும் காட்டப்படுமா? என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பு…

Tags: shop encroachmentspoor hygiene.City Corporation administrationtrichyPanjappurPanjappur bus terminal
Share
Tweet
SendShare
Previous Post

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies