ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி - இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் - சிறப்பு தொகுப்பு!
Oct 16, 2026, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹவுதிகள் சவூதி அரேபியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனர். பாகிஸ்தான், துருக்கி, அமெரிக்கா கைவிட்ட நிலையில் சவூதி அரேபியா இஸ்ரேலின் உதவியை நாடியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இஸ்ரேல் மற்றும் சவூதி இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லை. சவூதி அரேபியா இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாக்க வேண்டும் என்ற நிபந்தனையை சவூதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சவூதியின் இந்த பாலஸ்தீன கோரிக்கையை இஸ்ரேல் முற்றிலுமாக நிராகரித்துள்ளதால் ஆபிரகாம் ஒப்பந்தத்தின் கீழ் இருநாடுகளுக்கும் இடையே சுமூக உறவுகள் ஏற்பட எடுத்த முயற்சிகள் தடைபட்டுள்ளன.

குறிப்பாக 2023-ல் அமெரிக்காவின் முயற்சியில் இஸ்ரேலும், சவூதியும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் இறுதி கட்டத்தில் இருந்தன. அதே ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் தீவிரமாக்கியது. இதனால் அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகாமலே முடங்கியது.

ஈரான் மீதும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவூதிகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஹவூதிகள், கடந்த சில மாதங்களாக சவூதி மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதிகளில் சவூதி தலைநகர் ரியாத்தில் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவூதிகள் நடத்திய பயங்கர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கிய தாட் மற்றும் பேட்ரியாட் போன்ற வான் பாதுகாப்பு அமைப்புக்களைக் கொண்டுள்ள சவூதி அரேபியாவின் அதிநவீன வான் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நாட்டின் பரப்பளவு பெரியதாக இருப்பதும், இடைமறிப்பு ஏவுகணைகள் குறைவாக இருப்பதாலும் சவூதியின் பாதுகாப்புக்குள் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஹவூதிகளின் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,வரலாற்று ரீதியாக இஸ்ரேல் என்ற தனிநாட்டை ஏற்றுக்கொள்ளாத சவூதிக்குத் தனது பகிரங்க ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சவூதிக்கு ராணுவ உதவிகளை வழங்கவும் இஸ்ரேல் முன்வந்துள்ளது.

இந்த ஒரு உதவியின் மூலம் நட்புறவு, வர்த்தக உறவு, எதிர்காலத்தில் மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்பந்தம் ஏற்படுத்த முடியும் என இஸ்ரேல் தீவிரமாக நம்புகிறது.

அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகத்தின் மத்தியஸ்தம் மூலமாக, ஹவுதிகளுக்கு எதிரான உளவுத்துறைத் தகவல்களை இஸ்ரேல், சவூதிக்கு வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுடன் நேரடி இராணுவ ஒத்துழைப்பு சவூதி மக்களிடம் கடும் எதிர்ப்பை உருவாக்கலாம் என்ற அச்சத்தில் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

2015 முதல், நாட்டின் எண்ணெய் வசதிகள், விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான ஹவூதிகள் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், சவூதி அரேபியா ஆரம்பத்தில் அமெரிக்காவிடம் தான் உதவியை நாடியது. கடந்த செப்டம்பர் மாதம் ஹவூதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு சவூதி பட்டத்து இளவரசர் வைத்த கோரிக்கையை அதிபர் ட்ரம்ப் நிராகரித்தார். ஆனால் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், இலக்குகளைக் குறிவைக்கவும் உதவி வழங்குவதாக உறுதியளித்தார்.

ஏற்கனவே,பாகிஸ்தானுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து மெக்கா முத்தரப்பு இராணுவ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் பாதுகாப்பு உறுதிமொழிகள், சவூதி அரேபியாவின் தேவைகளுக்குப் போதுமான பாதுகாப்பை இன்னும் வழங்கவில்லை.

துருக்கி, படைகளை அனுப்புவதையோ அல்லது தாக்குதல் நடவடிக்கைகளில் இணைவதையோ நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்கள் யேமனில் உள்ள ஹவூதிகளின் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன என்றாலும் அந்நாட்டுக்கு சில வரம்புகள் உள்ளன.

இந்தச் சூழலில் சவூதி அரேபியா-இஸ்ரேல் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு இராஜதந்திர திருப்புமுனை எட்டுவதற்கு இது போதுமானதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா – ஈரான் இடையே நேரடியாகவும், மறைமுகமாகவும் அமைதி பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கும் இடைக்கால தேர்தலுக்குப் பின் ஈரான் மீது மீண்டும் பெரும் தாக்குதலை நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: houthi rebelsYementurkeyIran-US wariran us war newsus iran wariran us war news todaymecca alliancesaudi arabiaIsrael
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies