இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? - சிறப்பு தொகுப்பு!
Oct 16, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2026, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ அழைப்பினை ஏற்றுக் கொண்ட நேபாள பிரதமர் ஷா வரும் நவம்பரில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வரலாற்று ரீதியாகவே நேபாள பிரதமர்கள் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு இந்தியாவையே தேர்ந்தெடுத்து வந்துள்ளனர்.

இதற்கு மாறாக 2008-ல் புஷ்ப கமல் தஹால் ‘பிரசண்டா’ சீனாவுக்கும் , 2011-ல் ஜலநாத் கனால் ஐநா சபையின் பன்முக மாநாட்டிற்காக துருக்கிக்கும் , 2021-ல் ஷேர் பகதூர் தேவுபா காலநிலை மாற்றம் குறித்த உடன்படிக்கை மாநாட்டிற்காக இங்கிலாந்துக்கும் பிரதமராக பொறுப்பேற்ற பின் தங்கள் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டனர்.

முன்னதாக, நேபாள பிரதமராகப் பொறுப்பேற்றதும் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த கே.பி. சர்மா ஒலி, 2024 டிசம்பரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, ​​இந்த ‘இந்தியா-முதலில்’ என்ற பாரம்பரியத்தை மாற்றியமைத்து, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்குச் சீனாவைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்போது இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என்று ஒலி கூறியிருந்தார்.

நேபாளப் பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷா, முதலில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுடன் தொடர்புகொள்வதில் பெரிய அளவில் தயக்கம் காட்டிவந்தார். பின்னர், இந்திய மற்றும் சீனத் தூதர்களைத் தனித்தனியாகச் சந்திக்க முடிவு செய்த ஷா, கடந்த ஆகஸ்ட்டில் இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவாவுடன் தனது முதல் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு வந்த நேபாளத்தின் ஆளும் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்சானேவுக்கு பாஜக தலைமையகத்தில் சம்பிரதாய சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நேபாளத்தில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டவுடன் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா வைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, 130 டன்களுக்கும் அதிகமான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பியதுடன், மீட்பு மற்றும் தடயவியல் நடவடிக்கைகளுக்காக 54 நிபுணர்கள் அடங்கிய மீட்புக் குழுவினரை இந்தியா அனுப்பி வைத்தது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாலேந்திர ஷா ஆற்றிய உரையில், இந்தியாவின் உடனடி உதவிக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் நேபாளப் பிரதமரின் இந்திய சுற்றுப் பயணம் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளில் இருநாடுகளின் தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல் பிரதமர் பாலேந்திர ஷாவின், பலன் சார்ந்த மற்றும் அர்த்தமுள்ள இந்தியப் பயணத்திற்காக நேபாளமும் இந்தியாவும் இரு தரப்பினரும் காத்திருக்கின்றனர் என்று கூறியிருந்தார்.

நேபாள பிரதமரின் இந்திய பயணத்தின்போது, ​​இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் நேபாள காவல் அகாடமி (Nepal Police Academy) மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சுனௌலி எல்லைக்கு அருகிலுள்ள பைரஹாவா ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி (Integrated Check Post) போன்ற பல திட்டங்களைத் தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் தோதரா சந்தானி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, அருண் நீர்மின் திட்டம் மற்றும் சிலிகுரி-ஜாப்பா பெட்ரோலியக் குழாய்வழித் திட்டம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும் இருநாட்டுத் தலைவர்களும் தொடங்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ஒத்துழைப்பு இருந்தபோதிலும், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எனவே எல்லைப் பிரச்சினை, நேபாளத்திற்கான கூடுதல் வான்வழி நுழைவுப் பாதைகள், வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: PM ModichinaIndia-ChinaIndia Nepal TiesNepalese Prime Minister ShahNepalese Prime MinisterPushpa Kamal Dahal 'Prachandanepal pms india visit
Share
Tweet
SendShare
Previous Post

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Related News

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies