தலைநகர் டெல்லியில் தடையை மீறி போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே, நேஹா போரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி கனாட் பிளேஸ் பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். பிஎன்.எஸ் சட்டம் 163-வது பிரிவின்கீழ் தடை உத்தரவுகள் அமலில் இருக்கும் நிலையில், டெல்லி போலீசாரின் உத்தரவையும் மீறி போராட்டத்திற்கு செல்ல CJP தலைவர் அபிஜித் தீப்கே முயன்றார்.
இதையடுத்து அவரை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். இதே போன்று, போராட்டத்தில் ஈடுபட்ட நேஹா போரா உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்தனர்.
















