மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற, இம்மாத இறுதியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைச் செயல்படுத்தும் நோக்கில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
தற்போது மசோதாவுக்கு ஆதரவு திரட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
சிறப்புக் கூட்டத்தொடருக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
















