கோவை மக்களவைத் தொகுதியை இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பயந்துபோய் கைகழுவிட்டது. இதற்கு, அந்த தொகுதியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற பயமே காரணம் என கூறப்படுகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என பெருமைப் பெற்றது கோயமுத்தூர். இந்த மாவட்டத்தில், கனரக வாகனங்கள், வெட் கிரைண்டர், தண்ணீர் பம்புகள் மற்றும் துணி ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், தற்போது இந்த மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் எதிர்பார்த்தைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதால், கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
இந்த தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.
இங்கு 1957 முதல் 2019 வரை 17 முறை நடைபெற்ற எம்பி தேர்தலில் 5 முறை காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், இந்த தொகுதியில் மீண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறை, இந்த தொகுதியை சிபிஎம் கை கழுவிட்டது. அதற்கு காரணம், இந்த தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியானது.
இதனால், பாஜகவிடம் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், தொகுதியை திமுகவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டது சிபிஎம்.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடுகிறது. கோவை தொகுதியை நாங்கள் விட்டுக் கொடுத்தோம். திண்டுக்கல் தொகுதியை திமுக விட்டுக்கொடுத்தது என்றார்.
மேலும், கடந்த முறை போட்டியிட்ட கோவை மக்களவை தொகுதியை விரும்பி கொடுக்க திமுக முன்வந்தபோதும், அதை மறுத்து, மாநிலங்களவை சீட் வாங்கிக் கொண்டு நடிகர் கமல் சைலண்ட் ஆகிவிட்டார்.
ஓ…இதுதான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதோ?