பாஜக – ஜனநாயக ஜனதா் கட்சி இடையே கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக பாஜக ஜனநாயக ஜனதா் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிகிறது. இதனையடுத்து முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகல் கடிதத்தை அரியானா ஆளுநரிடம் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அளித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதனையடுத்து ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணியுடன் ஆட்சியமைத்தது.
இந்நிலையில் பாஜகவுக்கு 7 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.