இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. குறிப்பாக, இலகுரக போர் விமானம் (எல்சிஏ) தேஜாஸ் இன்று செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, விமானி பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினார்.
இச்சம்பவம் குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம் ஒன்று இன்று ஜெய்சால்மரில் செயல்பாட்டு பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. விமானி பத்திரமாக வெளியேறினார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த விபத்தில் உயிர் சேதமோ, பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. விமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.