நமது நாட்டில் ஏற்கனவே இருந்த 1955 குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அரசு கடந்த 2019 -ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகள் பின்னர், இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நான் ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டம் சொல்வது என்ன என்பதை முதலில் படியுங்கள். அப்போதுதான் அதில் இருக்கும் உண்மை புரியும். தெரியும். இதில் யாருக்கு பயன் இருக்கிறது என்பது தெரியும். இந்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.
குடியுரிமை திருத்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் பாதிக்கப்பட்டு இந்தியா வரும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தான் குடியுரிமை திருத்த சட்டம்.
இந்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே நாட்டில் உள்ள யாரும் வெளிநாட்டிற்குப் போகச் சொல்ல மாட்டோம். குறிப்பிட்ட சில நாடுகளில் வாழ முடியாதவர்களுக்குத்தான் குடியுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த குடியுரிமை திருத்த சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானது என்றார்.