முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா? - அண்ணாமலை கேள்வி
Sep 10, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Mar 12, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லின் மேல் எழுதப்பட்டது அல்ல, அவ்வப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் திருத்தப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

குடியுரிமை திருத்த சட்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் தமிழகத்தில் சில கட்சிகள் தங்கள் கருத்தை சொல்கின்றன. இந்தியாவில் இரண்டு வழியில் குடியுரிமை வழங்கப்படுகிறது. பிறப்பு , வழித்தோன்றல் என இரு வகையில் குடியுரிமை வழங்கப்படும்.

2003 முதல் தந்தை, தாய் இருவரும் இந்தியாவில் பிறந்திருந்தால் குடியுரிமை அல்லது அவர்களில் ஒருவர் மட்டுமே இந்தியாவில் பிறந்திருந்தாலும் மற்றொருவர் சட்ட விரோதமாக குடியோறாமல் இருந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும்.

1950-87 , 1987 – 2003 , 2003 முதல் தற்பொழுது வரை என இந்தியாவில் இதுவரை 3 முறை குடியுரிமை சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லின் மேல் எழுதப்பட்டது அல்ல, அவ்வப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளால் திருத்தப்பட்டுள்ளது.

3 நாடுகளில் சிறுபான்மையாக இருப்பவர்கள், மதத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு இந்தியாவிற்குள் பலர் வந்துள்ளனர்.

அகதிகளை திருப்பி அனுப்புவது இந்தியாவில் நடைமுறையில் இல்லை. அவர்கள் இங்கே தங்கி இருக்கலாம். அவர்களது நாட்டில் பிரச்சனை முடிந்தவுடன் திருப்பி அனுப்பப்படுவர்.

ஒருவர் குடியுரிமை பெற இந்தியாவில் வசித்த கடைசி 14 ஆண்டில், 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்

2021-22 , ஆண்டு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்த கருத்துப்படி 2019-க்கு பிறகு குறிப்பிட்ட 3 நாடுகளில் இருந்து வந்த 1414 நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

இச்சட்டம் யாருக்கு எதிராது என்பதை தமிழக கட்சிகள் கூற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்த வரி இசுலாமியர்களின் குடியுரிமையை நீக்குவோம் என கூறியுள்ளது..?

இலங்கை தமிழர்களை பொறுத்தவரை..1986 இல் உள்துறை அமைச்சரவை போட்ட உத்தரவை இன்றளவும் தமிழக அரசு பின்பற்றுகிறது. அதன்படி இலங்கையில் பிரச்சனை முடிந்தவுடன் அவர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களில் 14 ஆண்டு க்கு மேல் வசித்த பலருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மக்களை குழப்பி திசைதிருப்பும் வேலையை தமிழகத்தில் சில கட்சிகள் செய்கின்றன. குடியுரிமையை கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.

2019 க்கு பிறகு 9 மாநிலங்களுக்கு குடியுரிமையை திருத்த மத்திய அரசு அதிகாரம் கொடுத்துள்ளது . அந்த மாநிலங்கள் 3 நாடுகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் குடியுரிமையை புதிதாக பெற்றுள்ளனர். குடியுரிமை கொடுக்கும் சட்டம்தானே தவிர, பறிக்கும் சட்டம் அல்ல. இந்தியாவில் 1லட்சத்து 98 ஆயிரத்து 665 அகதிகள் இருந்தனர்.
2022ல்- 4.5 லட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் 14 ஆண்டுகள் வசித்தால் குடியுரிமை பெற முடியும். ஆனால் குறிப்பிட்ட 3 நாட்டில் இருந்து வந்திருந்தால் 5 ஆண்டு வசித்திருந்தால் போதுமானது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நாட்டாமை சரத்குமார் முழுமையாக தன் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.. அவர்களை வரவேற்கிறோம்… எங்கள் குடும்பம் மேலும் பெரிதாகியுள்ளது.

இலங்கை அகதிகள் அனைவருக்கும் சட்டப்படி விரைந்து இந்திய குடியுரிமை யை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு.

இலங்கை அகதிகள் வெளியில் சென்று வேலை செய்ய, படிக்க எந்த தடையும் இல்லை. மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பறித்தது இலங்கை அரசுதான். அதன் பிறகு அவர்களை மீண்டும் அழைத்து வந்து மலைப்பகுதியில் குடியமர்த்தினர்.

குறிப்பிட்ட 3 நாடுகளும் அடிப்படையில் தங்களை இசுலாமிய நாடுகளாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள். தஸ்லிமா நஸ்ரின் போன்ற இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்து வசிக்கின்றனர், அவர்களை நாகரீகமாக, சமமாக நடத்துகிறோம். தனி நபர்களுக்கும் , அரசுக்குமான சண்டை வேறு. அவர்கள் 14 ஆண்டுகள் வசித்திருந்தால் குடியுரிமை பெற முடியும்.

இலங்கை தங்களை சிங்கள நாடாக அறிவித்துக் கொள்ளவில்லை. இலங்கையில் 13 வது சட்டத் திருத்தத்தை நடைமுறை படுத்த வேண்டும் என அழுத்தமாக கூறி வருகிறோம். யாழ்ப்பாணத்தில் சிக்கல்கள் இருந்தாலும், அங்கே தமிழர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

பாகிஸ்தானில் எத்தனை இந்துக்கள் கோயில்களில் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர்?  ஸ்டாலினுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்த என்ன அதிகாரம் உள்ளது..? முதல்வர் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா என தெரியவில்லை. பள்ளியில் உள்ள வரலாற்றுப் புத்தகத்தில் குடியுரிமை குறித்து உள்ளதை அவர் நன்றாக படிக்க வேண்டும். முதல்வருக்கு எந்தளவு அரசியல் சட்டம் தெரிந்துள்ளது என சந்தேகமாக உள்ளது.

பிரதமர் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை என கேட்கிறீர்கள். தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. அதிமுக உட்பட எல்லா கட்சியும் எங்களை விமர்சிக்கலாம், அதற்கு பதில் கூறவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. யாரை விமர்சிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களைத்தான் விமர்சனம் செய்வோம்.

அதிமுகவுக்கு பதில் சொன்னால், விடுதலை சிறுத்தைகள் , கம்யூனிஸ்ட் போன்றவர்களுக்கும் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

வேண்டும் என்றால் அதிமுக அவர்கள் சார்பில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கட்டும். பிரதமர் இங்கு வரும்போது விமர்சனம் செய்கிறோம். எந்த நிபந்தனையும் இல்லாமல் சமக இணைந்துள்ளது. நேற்று இரவு 2 மணிக்கு சரத்குமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜகவில் இணைத்து கொள்வதாக கூறினார்.

ஒருவர் பிரதமரை சந்திக்க வரும்போது அவர் நல்லவரா.. கெட்டவரா.. வழக்குகள் எதும் இருக்கிறதா என்பதைத்தான் நாங்கள் பார்க்க முடியும், அவர் பிரதமரிடம் என்ன பேசுகிறார் என்று கேட்பது எங்களது கடமை கிடையாது.

பிரதமரை சந்தித்த நபர் ஒருவர், மருத்துவமனையில் இருக்கும் தனது குழந்தையை கூட பார்க்காமல், பிரதமரை சந்திக்க வந்துள்ளதாக கூறிய நிலையில் அவருக்கு குழந்தையே பிறக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி குறித்து கேள்வி கேட்கின்றீர்கள்.

அவருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்து உயிருக்குப் போராடும் நிலையில் ஐசியு- வில்  உள்ளனர். அந்த குழந்தைகளை காப்பாற்ற அவர் போராடி வருகிறார். குழந்தைகள் நன்றாக வந்த பிறகு அந்த புகைப்படத்தை நாங்கள் காட்டுகிறோம். மாநில தலைவராக இருந்த தகவலை அதிகாரபூர்வமாக நானே வெளியிடுகிறேன்.

என்னுடைய பணி lift போல தலைவர்களை அழைத்து செல்லும் பணி.. என்னை தேர்தலில் போட்டி இடுங்கள் என்றோ, போட்டி இடாதீர்கள் என்றோ என்னிடம் யாரும் கூறவில்லை.

எல்.முருகன் தேமுதிக , பாமக வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உரிய நேரத்தில் அதுகுறித்து அறிவிப்பார்கள்.

15 முதல் 19 ம் தேதி வரை பிரதமர் தமிழகம் வர வாய்ப்பு அதிகம் உள்ளது, அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் அறிவிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!

Next Post

”இந்திய முஸ்லிம்கள் அனைவரும் சிஏஏவை வரவேற்க வேண்டும்!” – அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies