”இந்திய முஸ்லிம்கள் அனைவரும் சிஏஏவை வரவேற்க வேண்டும்!" - அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்!
Jul 29, 2026, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”இந்திய முஸ்லிம்கள் அனைவரும் சிஏஏவை வரவேற்க வேண்டும்!” – அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அனைவரும் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம்  நடைமுறைக்கு வந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி,

“இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக்கொண்டுவந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது அமலுக்கு வந்ததே என்பதில் மகிழ்ச்சி.

இந்தச் சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முன்னதாக பாகிஸ்தான்.

ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க ஏதுவாக எவ்விதச் சட்டமும் இல்லை. தங்கள் நாட்டில் மதத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இங்கேயும் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

பரவலாக சொல்லப்படுவதுபோல் இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது எந்த ஒரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்காது.

கடந்த காலங்களில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. அவை புரிதல் இல்லாததால் நடந்தன. சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அத்தகைய புரிதலற்ற சூழலை விதைத்தனர். உண்மையில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் சட்டத்தை வரவேற்க வேண்டும்.

நம் நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தூண்டி விடப்படுகின்றனர். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் ஷரத்து இச்சட்டத்தில் இல்லவே இல்லை. சிஏஏ சட்டம் வங்கதேசத்தில், பாகிஸ்தானில் அவதிப்பட்டு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவே உள்ளது”  எனத் தெரிவித்தார்.

Tags: caa"Indian Muslims should welcome CAA!" - All India Muslim Jamaat Leader!
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கூடம் சென்று இருக்கிறாரா? – அண்ணாமலை கேள்வி

Next Post

முஸ்லீம் சமூகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை! – டெல்லி ஹஜ் கமிட்டி

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies