மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
Nov 15, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொரிஷியஸ் அதிபர் ரூபன், பிரதமர் ஜுனத் ஆகியோரை சந்தித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மொரிஷியஸ் தீவில் அதிபர் ரூபுன், பிரதமர் ஜுக்னவுத் ஆகியோரை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது முதல் அரசுமுறைப் பயணமாக மார்ச் 11 அன்று மொரிஷியஸ் சென்றடைந்தார். சர் சீவூசாகுர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மொரிஷியஸ் மூத்த பிரமுகர்கள் முழு அரசு மரியாதையுடன் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர்  திரெளபதி முர்மு, மொரிஷியஸ் அதிபர் பிருத்விராஜ்சிங் ரூபுனை அரசு மாளிகையான லீ ரெடுயிட்டில் சந்தித்தார்.

தனித்தன்மை வாய்ந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-மொரீஷியஸ் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். கடந்த ஆண்டு மாநில இல்லத்தின் மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகள் தோட்டத்தையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.

பின்னர், பாம்பிளவுஸ் சேர் சீவசாகுர் ராம்கூலம் தாவரவியல் பூங்காவிற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சேர் சீவசாகுர் ராம்கூலம் மற்றும் சேர் அனிரூத் ஜக்நாத் ஆகியோரின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மாலையில் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் குடியரசுத் தலைவரை வரவேற்று அவரை கௌரவிக்கும் வகையில் விருந்து அளித்தார்.

விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

சுதந்திரம் பெற்ற குறுகிய காலத்தில், மொரிஷியஸ் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாகவும், பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், வளமான நாடாகவும், மதிப்புமிக்க சர்வதேச நிதி மையமாகவும், செழிப்பான சுற்றுலாத் தலமாகவும், மிக முக்கியமாக உலகின் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளிலும் ஒன்றாகவும் உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

“மொரீஷியஸ் அதிசயமாக” பொருளாதாரத்தை மாற்றிய தொலைநோக்கு பார்வைக் கொண்ட மொரீஷியஸ் தேச நிர்மாணிப்பாளர்கள் ஆப்பிரிக்காவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் உத்வேகம் அளிக்கின்றனர் என்று அவர் பாராட்டினார்.

மொரீஷியஸில் தங்களது சகோதர, சகோதரிகளின் வெற்றியால் இந்தியர்கள் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். நமது இரு அரசுகளும் ஒருவருக்கொருவர் முன்னுரிமை அளித்து, இந்த உறவில் முதலீடு செய்வதால், சமீபத்திய ஆண்டுகளில் நமது இருதரப்பு உறவுகளில் விரைவான முன்னேற்றம் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

மொரிஷியஸுக்கு ஒரு புதிய சிறப்பு ஏற்பாட்டையும் அவர் அறிவித்தார். இதன் கீழ், 7-வது தலைமுறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொரீஷியர்கள் இப்போது இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள். இது பல இளைய மொரீஷியஸ் மக்கள் தங்கள் மூதாதையர்களின் நிலத்துடன் மீண்டும் இணைக்க உதவும்.

வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், மொரிஷியஸ் போன்ற நெருங்கிய கூட்டாளிகளை நம்முடன் தொடர்ந்து இணைத்துக் கொள்வோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். “வசுதைவ குடும்பகம்” மற்றும் “சர்வஜன சுகின பவந்து” ஆகிய முக்கிய மாண்புகளைப் பின்பற்றி, உலக அமைதி மற்றும் செழிப்புக்கான ஆதாரமாக இந்தியா தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Next Post

பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

Related News

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

காஞ்சிபுரம் : ஊராட்சி டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies