ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சச்சினின் (22) 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் மும்பை வீரர் முஷீர் கான் (19).
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த தொடரின் இறுதிப்போட்டி கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் விளையாடிவருகிறது.
இன்று நான்காவது நாளாக இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய விதர்பா அணி 105 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதை தொடர்நது 2வது இன்னிங்ஸ் தொடங்கியது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 418 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக இளம் வீரர் முஷீர் கான் 136 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது, 19 வயதான முஷீர் கான் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த மும்பை வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு 1994-95 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக டெண்டுல்கர் தனது 21 வயதில் சதம் அடித்ததே (140, 139 ரன்கள்) இந்த வகையில் சாதனையாக இருந்தது.
இந்நிலையில் தற்போது அதை முறியடித்துள்ளார் இளம் வீரர் முஷீர் கான். மேலும் இவர் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ள சர்பராஸ் கானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.