மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.2.23 கோடி மதிப்பிலான, 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர்.
இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை, மும்பை விமான நிலையத்தில், 8 வெவ்வேறு வழக்குகளில், ரூ.2.35 கோடி மதிப்புள்ள 4.22 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மொபைல் போன் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.