இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் கழகம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கனமழை வெளுத்து வாங்கியது.
அப்பகுதியில், தொடர்ந்து பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும், சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இத அடுத்து, மீட்புக் குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் கழகம் அறிவித்துள்ளது.