மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 03:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்திர பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

அந்த வகையில் மார்ச் 15 –ம் தேதி காலை கிராம தேவதை பூஜையும், மாலையில் மிருத்சங்கிரஹமம், அங்குரார்பணமும், இரவு ஸ்ரீ நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகனம் மற்றும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிங்காரவேலர் சுவாமி மயில் வாகனம் வீதி உலா நடைபெறும்.

மார்ச் 16 –ம் தேதி காலை, துவஜாரோஹணம் (கொடியேற்றம்) சுவாமி வெள்ளி பவழகால் விமானம் பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடும், இரவு புன்னை மரம், கற்பக விருக்ஷம் மற்றும் வேங்கை மரம் வீதி உலாவும், மார்ச் 17 –ம் தேதி காலை, வெள்ளி சூர்ய பிரபை வாகனம் வீதி உலாவும், இரவு வெள்ளி சந்திர பிரபை வாகனம், கிளி வாகனம் மற்றும் ஹம்ச வாகனம் வீதி உலா பவனி நடைபெறும்.

மார்ச் 18 –ம் தேதி காலையில் வெள்ளி அதிகார நந்தி, கந்தர்வி மற்றும் 107 -வது ஆண்டு கந்தர்வன் வாகன வீதி புறப்பாடும், இரவு, வெள்ளி பூத வாகனம், பூதகி மற்றும் தாரகாசூர வாகன வீதி உலாவும், மார்ச் 19–ம் தேதி காலை, வெள்ளி புருஷா மிருக வாகனம், சிங்கம் மற்றும் புலி வாகன வீதி உலாவும், இரவு நாக வாகனம், காமதேனு மற்றும் ஆடு வாகன வீதி உலாவும் நடைபெறும்

மார்ச் 20 –ம் தேதி காலை, சவுடல் விமானம் புறப்பாடும், நள்ளிரவு, வெள்ளி ரிஷப வாகனம், தங்க ரிஷப வாகனம் மற்றும் தங்க மயில் வாகனம் வீதி உலாவும், மார்ச் 21– ம் தேதி காலை பல்லக்கு-ம், இரவு யானை வாகனம் வீதி புறப்பாடு நடைபெறும்.

மார்ச் 22 –ம் தேதி காலை திருத்தேரோட்ட ஊர்வலமும், இரவு, திரும்புகழ் மற்றும் பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவையும், மார்ச் 23-ம் தேதி காலை, திருஞானசம்பந்தர் அங்கம்பூம்பாவை உயிர்ப்பித்தல் விழாவும், மதியம், அறுபத்துமூவர் விழாவும், இரவு, ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி அஸ்வ வாகனம் பார்வேட்டை விழாவும், நள்ளிரவு, பஞ்சமூர்த்தி ஏகாந்த சேவை நடைபெறும்.

மார்ச் 24-ம் தேதி காலை, பஞ்சமூர்த்தி வெள்ளி கேடயம் வீதி புறப்பாடும், மாலை, பிக்ஷாடனர் வீதி புறப்பாடும், நள்ளிரவு பஞ்சமூர்த்தி வீதி புறப்பாடும், மார்ச் 25 –ம் தேதி திருக்கூத்தபிரான் (சின்ன நடராஜா) புறப்பாடு மற்றும் நடராஜ தீர்த்தவாரி, பஞ்சமூர்த்தி தீர்த்தவாரி புறப்பாடும், மாலை, திருகல்யாண மஹோத்சவம் தொடர்ந்து கைலாய வாகனம் வீதி புறப்பாடும், நள்ளிரவு, துவஜாவரோஹணமும் (கொடியிறக்கம்), சண்டிகேஸ்வரர் உலா நடைபெறும்.

இதேபோல, மார்ச் 26 –ம் தேதி பந்தம் பரி விழா, மார்ச் 27 -ம் தேதி முதல் ஏப்ரல் 5 -ம் தேதி வரை விடையாற்றி விழா நடைபெறும்.

மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும் என்பதால், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்வர். இதனால், பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா களைகட்டும்.

Tags: Panguni Uthra Brahmotsavam in Mylapore Sri Kapaleeswarar Temple!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தோனேசியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 32 பேர் பலி!

Next Post

குடியுரிமை திருத்தச் சட்டம் : புதிய இணையதளம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies