செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை இல்லை! - சென்னை உயர் நீதிமன்றம்
Jul 2, 2025, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை இல்லை! – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Mar 13, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும், செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி, செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்த குற்றம் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக  சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட  செந்தில் பாலாஜி, தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை (பிப்ரவரி- 15) எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு, நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தொடங்க முடியாது என்றும் அமலாக்க துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தனர்.

செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags: Enforcement departmentDMKdmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

குடியுரிமை திருத்தச் சட்டம் : புதிய இணையதளம்!

Next Post

நமோ பாரத் ரயில் வீடியோ – பிரதமர் மோடி பாராட்டு!

Related News

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

பாகிஸ்தான் : பலத்த காற்றால் விழுந்த பெயர் பலகை – ஒருவர் படுகாயம்!

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies